அல்லிநகரம் நகராட்சி பகுதியில்சட்டவிரோத குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கண்டுபிடிப்பு:ஆணையர் தகவல்


அல்லிநகரம் நகராட்சி பகுதியில்சட்டவிரோத குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கண்டுபிடிப்பு:ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு உள்ளதாகவும், அனுமதி பெறாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

தேனி

அபராத நடவடிக்கை

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி அல்லிநகரம் நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.68.83 கோடி மதிப்பீட்டில் வைகை அணை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு நகர் பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி பொதுமக்களின் அடிப்படை தேவையினை முழுமையாக பூர்த்தி செய்வதே அரசின் நோக்கமாகும்.

எனவே அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு பெறுவது கட்டாயமாகும். நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் தங்களது குடியிருப்புக்கு மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பது நகராட்சி விதிகளுக்கு புறம்பானது. ஆகையால் மின்மோட்டார் பயன்படுத்தினால் உடனடியாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதோடு மட்டுமில்லாமல் குடிநீர் இணைப்பும் துண்டிப்பு செய்யப்படும்.

பாதாள சாக்கடை

இதேபோல், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை திறந்த வெளியிலோ அல்லது கழிவுநீர் வடிகாலில் வெளியேற்றுவது நகராட்சி விதிகளுக்கு புறம்பான செயலாகும். எனவே உரிய முறையில் விண்ணப்பித்து புதிய பாதா ளசாக்கடை இணைப்பு பெறுவது கட்டாயம் ஆகும்.

நகர் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இல்லாமல் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது என கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அனுமதி இல்லாத இணைப்புகளை முறைப்படுத்திகொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story