சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கும் படிவத்தை வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- இளைஞர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தி.மு.க.வின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துக் கூறி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நீர்வளத்துறை சார்பில் நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜா, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.