குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு


குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு
x

குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கங்காளஈஸ்வரி தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குடிநீர்தொட்டி 40 ஆண்டுகள் ஆகியும் பழுது பார்க்கப்படாததால் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. ஆதலால் சேதமடைந்த குடிநீர்தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்லைன் 2 கி.மீ. தூரத்திற்கு அகற்றப்பட்டதால் அங்கு குடிநீர் வினிேயாகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் இல்லாத ஊராட்சியாக இருப்பதால் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்கள், மக்கள் நல பணியாளர், ரேஷன் கடை ஊழியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story