பள்ளிகளை சீரமைக்க ரூ.21½ லட்சம் நிதி ஒதுக்கீடு


பள்ளிகளை சீரமைக்க ரூ.21½ லட்சம் நிதி ஒதுக்கீடு
x

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிகளை சீரமைக்க ரூ.21½ லட்சம் நிதி ஒதுக்கீடு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை தலைவர் விமலாமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் தச்சூர் மற்றும் பால்ராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், அகரக்கோட்டாலம், கல்லூரிகுப்பம், சிறுங்கூர் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், பழுது நீக்க பணிகள் மேற்கொள்ளுதல், கீழ்த்தளம் மற்றும் மேற்கூரை பழுது நீக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.21 லட்சத்து 69 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்தல், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தில் பேவர் பிளாக் கல் பதித்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், புதிதாக மோட்டார் மற்றும் குழாய்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு உறிஞ்சுக்குழி அமைத்தல் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தல், இந்திலி, பொற்படாக்குறிச்சி, தச்சூர் ஆகிய ஏரிகளை தூர்வாரி, ஆழப்படுத்தி கரையை பலப்படுத்துதல், விளாம்பார் ஊராட்சி மீனவர் தெருவில் சிறு பாலம் அமைத்தல் உள்பட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேலாளர் பார்வதி நன்றி கூறினார்.


Next Story