அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு


அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு
x

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவ்ட்டுள்ளது.

சென்னை,

சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தில் மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மாவட்டங்கள் 3 ஆக பிரிக்கப்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், மாவட்ட அளவில் கண்காட்சிகளை நடத்த கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவில் அனைத்துத் துறை அதிகாரிகள், வாசகர்கள், பதிப்பாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story