மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
திருக்கோவிலூரில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி திருக்கோவிலூரில் நகர தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான மனோகர், தட்சிணாமூர்த்தி, சீனிவாசன் உள்பட பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு கட்சியின் மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளரும், தொழிலதிபருமான கார்த்திகேயன் சால்வை அணிவித்து வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வசந்த் கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிதிருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story