மாற்றுக்கட்சியினர் பா.ம.க.வில் இணைந்தனர்
சின்னசேலத்தில் மாற்றுக்கட்சியினர் பா.ம.க.வில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்:
சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் நயினார்பாளையத்தில் பல்வேறு கட்சியினர், அக்கட்சிகளில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேக்காடு பகுதியை சேர்ந்த குருநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலையில் பா.ம.க.வில் இணைந்தனர். அப்போது ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்ராசு, மாவட்ட இளைஞர் சங்க தலைவர் தாண்டவராயன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் அக்னி புருஷோத், மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர் மணி, வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய தலைவர் செல்வம் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story