முன்னாள் மாணவிகள் சந்திப்பு


முன்னாள் மாணவிகள் சந்திப்பு
x

ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரி மற்றும் நர்சிங் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பசுமை இயக்கம் சார்பில் வழங்கிய 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் அலெக்சான்டர் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து காணொலி மூலம் விளக்கம் அளித்தார். ஆற்காடு பசுமை இயக்கம் கே.கணேஷ், ஜெயலலிதா கணேஷ், மாநில வீரசைவ பேரவை தேனி மாவட்ட தலைவர் பாண்டியன், செல்வராணி பாண்டியன், இயற்கை விவசாய ஆர்வலர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒவ்வொரு மாணவிகளும் தற்போது பணிபரியும் மருத்துவ சேவை குறித்தும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிக பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

மாணவிகள் தங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்த கல்வி நிறுவன நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் கோமதி பாலாஜி, இணை செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story