முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினார்கள்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 42 பேர் ஒன்றிணைந்து சந்திப்பு கூட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் டாக்டர் பழனி, குமணன், பொன்னுசாமி, ஆர்.எஸ்.சந்திரசேகர், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பள்ளிக்கு முகப்பில் நுழைவாயில், புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டுவது, பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பிட கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் உள்ள பழுதடைந்த பகுதிகளை சீரமைப்பது உள்ளிட்ட பல திட்டப் பணிகள் மேற்கொள்வது என முடிவு செய்து அதற்காக அனைவரும் சேர்ந்து ரூ.1½ லட்சம் நிதி திரட்டி உள்ளனர்.

மேலும் கூடுதலாக நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.

முடிவு செய்யப்பட்ட திட்டப்பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை அழைத்து கவுரவிப்பது என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


1 More update

Related Tags :
Next Story