முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் 1975-1978-ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சேகர், வணிகவியல் துறை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேராசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் முன்னாள் மாணவர்கள் மணியன், மதிசெல்வம், பீர்முகைதீன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். சுந்தர்ராஜன், நெல்லை கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாகசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

1 More update

Next Story