அமர்நாத் பனிலிங்க தரிசனம்


அமர்நாத் பனிலிங்க தரிசனம்
x

நெல்லையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் லட்சுமி திருமண மண்டபத்தில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்க தரிசனம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் நேற்று தொடங்கியது. பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகிகள் உமா, புவனேஸ்வரி, கோகிலா ஆகியோர் தலைமை தாங்கினர். செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சாரிய சுவாமி கொடியேற்றினார்.

விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள்எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், மின்சாரவாரிய தலைமை பொறியாளர் குப்புராணி, வருமான வரித்துறை உதவி ஆணையாளர் காசி சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மாவட்ட கருவூல அலுவலர் சாரா மார்க்ரெட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி ஜோதிர்லிங்க தரிசனத்தை தொடங்கி வைத்தனர்.

ஆர்.எம்.கே.வி.இயக்குனர் விஸ்வநாத், வருமான வரி அலுவலர்கள் ராஜபாண்டியன், மீனாட்சிசுந்தரம், ஆடிட்டர் சுப்பிரமணியன், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், செயற்பொறியாளர்கள் வெங்கடேஷ் மணி, பரிமளம், ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகமது ஷாபி, லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பள்ளி முதல்வர் உஷாராமன், விவேகானந்தா கல்வி குழும தலைவர் கல்யாணிசுந்தரம், கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அஷ்டலட்சுமி வேடத்தில் தத்ரூபமாக வீற்றிருந்த குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 31-ந் தேதி வரையிலும் அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story