நாய்களுடன் நட்பு பாராட்டும் அதிசய குரங்கு
தா.பழூரில் நாய்களுடன் குரங்கு ஒன்று நட்பு பாராட்டி வருகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர்- இடங்கண்ணி செல்லும் சாலையோரத்தில் கூட்டத்திலிருந்து பிரிந்த ஆண் குரங்கு ஒன்று கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் காமராஜர் நகர் அங்கன்வாடி அருகே சுற்றித்திரியும் சில நாய்களுடன் சேர்ந்து விளையாடிய அந்த குரங்கு தற்போது தினமும் மாலை நேரங்களில் நாய்களுடன் விளையாடி வருகிறது.
குரங்கிடம் நாய்கள் பகையாக இருக்கும். ஆனால் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த இந்த குரங்கு அங்குள்ள நாய்களுடன் நாட்பாக பழகி வருவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்று வருகிறார்கள். மேலும் இதனையறிந்த சுற்று வட்டார பகுதி மக்களும் மாலை நேரங்களில் அந்த குரங்கு நாய்களுடன் விளையாடும் அழகை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story