அம்பை நகராட்சி கூட்டம்

அம்பை நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
அம்பை:
அம்பை நகராட்சி சாதாரண கூட்டம் அதன் தலைவர் கே.கே.சி.பிரபாகரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிைல வகித்தார். பதிவுறை எழுத்தர் குமரேச சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார். நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர் வேலுச்சாமி, ம.தி.மு.க. கவுன்சிலர் முத்துலட்சுமி, தி.மு.க. கவுன்சிலர் அழகம்மை ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொது சுகாதாரத்துக்கு தேவையான அத்தியாவசிய திட்டப்பணிகள் மற்றும் நீரேற்று நிலையங்களுக்கு புதிய மோட்டார் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு நகராட்சியால் தயாரிக்கப்படும் பசுமை உரம் பாக்கெட் வழங்கப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.