அம்பலச்சேரி நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பலச்சேரி நடுநிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிககு பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை தாங்கினார். இதில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் சுகாதாரம் குறித்தும், கைகழுவுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை செலினா பிரின்ஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story