அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்    கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.

கடலூர்


கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். இதில் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி, தமிழக அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது, 2023-ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இவ்விருதை பெற விரும்புவோர் WWW.tn.gov.in/ta/forms/Deptname/1என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை மறுநாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 319-ல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story