கள்ளக்குறிச்சி பகுதியில்அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கி, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் திருமா பயிலகம் மற்றும் ஸ்ரீ விவேகானந்தா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருமா பயிலக நிறுவனர் ராமமூர்த்தி தலைமையில் நீட் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால், மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழ், ஒன்றிய கவுன்சிலர் தாமரைவண்ணன், ஸ்பெரி, ஷர்மிளா, அனிதா, ஜுவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே பெருமங்கலம் கிராமத்தில் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய தலைவர் முத்து தலைமை தாங்கி, அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் விருந்தோம்பல் மாவட்ட தலைவர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் கலைவேந்தன், துணைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.