அம்பேத்கர் பிறந்த நாள் விழா


அம்பேத்கர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 15 April 2023 12:45 AM IST (Updated: 15 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் சட்டமேதை டாக்டர். அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் அணி இணை செயலாளர் புஷ்பராஜ், மாநில மகளிர் அணி பிரசார செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, எசாலம்பன்னீர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிரஸ் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர் கோல்டுசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க.- தே.மு.தி.க.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட பட்டியல் அணி தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாநில பட்டியல் அணி துணைத்தலைவர் சம்பத்ராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், முருகவேல், நாகராஜ், மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன், நகர தலைவர்கள் விஜயன், வடிவேல்பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் ஆதவன்முத்து, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், ஜெயமூர்த்தி, நகர தலைவர் சிவா, பொருளாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏனாதிமங்கலம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் வேலு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், முன்னாள் கலைக் கலாசார பிரிவு ஒன்றிய தலைவர் சிவபாலன், பட்டியலின ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story