அம்பேத்கர் பிறந்த நாள் விழா


அம்பேத்கர் பிறந்த நாள் விழா
x

பட்டவர்த்தி கிராமத்தில் அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தில், அவரது உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மற்றொரு பிரிவினருக்குமிடையே கடந்த 2021-ம் ஆண்டு முதல் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பட்டவர்த்தி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாகஅம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரச்சினைகள் இன்றி நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த வாரம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பட்டவர்த்தி கிராமத்தில் அரசு தரப்பில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது என்றும் இதில், கிராம மக்கள் இரு தரப்பினரும் தலா 20 பேர் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை பட்டவர்த்தி கடைவீதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வாசலில் அரசு சார்பில் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மாலை அணிவித்தார். தொடர்ந்து அம்பேத்கார் உருவப்படத்துக்கு தாசில்தார், போலீசார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினர் 20 பேர் கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றொரு தரப்பினர் மரியாதை செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டவர்த்தி கிராமத்தில் மோதல் ஏற்படாமல் தடுக்க தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story