அம்பேத்கர் பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் கவுரி சங்கர் தியேட்டர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி தலைவர்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரி, புளியங்குடி விஜயா, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் அருகில் மக்கள் தேசம் பறையர் பேரவை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூணார் முருகன் முன்னிலை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் மாரி ராஜ், மாவட்ட அமைப்பாளர் டேனியல், மாவட்ட துணை செயலாளர் சங்கர் ஷா, விழா ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், நகர செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் சங்கரலிங்கம், நிர்வாகிகள் ராமர், கண்ணன், கரன், கார்த்திக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சிவகிரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்ட அவரது படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. மற்றும் சிவகிரி நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.