அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிப்பு


அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிப்பு
x

சேலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சேலம்

சேலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

தி.மு.க.- அ.தி.மு.க.

அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் கவுன்சிலர்கள் சங்கீதா நீதிவர்மன், இயமவர்மன், தொ.மு.ச. தலைவர் மணி, நெசவாளர் அணி அமைப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாலசுப்பிரமனியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.- காங்கிரஸ்

பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் தலைமையில் மாலை அணிவிதது மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணி, பொதுச்செயலாளர் ராஜகணபதி, கவுன்சிலர் கிரிஜா மற்றும் நிர்வாகிகள் திருமுருகன், நிஷார், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கர் மக்கள் இயக்கம்

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில தலைவர் ஜங்சன் அண்ணாதுரை தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வழிகாட்டு குழு தலைவர் ஆசிர்வாதம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அம்பேத்கர், மாநகர தலைவர் முருகன், செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய குடியரசு கட்சி சார்பில் மாநில செயல் தலைவர் கருமலை தலைமையிலும், அருந்ததிய மக்கள் இயக்கம் சார்பில் பொதுச்செயலாளர் பிரதாபன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாலு தலைமையிலும், புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் காந்தி தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் சீலநாயக்கப்பட்டியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் கோவிந்தன், செய்தி தொடர்பாளர் கதிர்வேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ம.க.

பா.ம.க. சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயராசா தலைமையில் நிர்வாகிகள் உடையாப்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

த.மா.கா.

சேலம் புறநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பெரிய வீராணம் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முனுசாமி, நாகராஜ், சிலை அமைப்பு குழு தலைவர் மாரியப்பன், குடியரசு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சின்னண்ணன் மற்றும் ராஜாமணி, முருகேசன், கணேசன், ஆறுமுகம், ராஜி, மதன், லட்சுமணன், சிவராமன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story