தாளவாடி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- அழகான பெண் குழந்தை பிறந்தது
தாளவாடி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- அழகான பெண் குழந்தை பிறந்தது
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள தொட்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரூபா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரூபாவுக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி அதிகமானது. உடனே அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தொட்டபுரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பின்னர் ரூபாவை அழைத்துக்கொண்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. முதியனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ரூபாவுக்கு வலி மிகவும் அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் வனப்பகுதியிலேேய ஆம்புலன்சை நிறுத்தினார். அதைத்தொடர்ந்து ரூபாவுக்கு மருத்துவ உதவியாளர் தனசேகரன் பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.