ஆம்புலன்ஸ் சேதம்


ஆம்புலன்ஸ் சேதம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் ஆம்புலன்சை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி பேரூராட்சி அலுவலக பகுதியில் த.மு.மு.க. ஆம்புலனஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று மதியம் மருத்துவ உதவியாக தூத்துக்குடிச் செல்ல அழைப்பு வந்ததையடுத்து டிரைவர் இத்ரீஸ் ஆம்புலன்சை எடுக்க சென்றார். அப்போது ஆம்புலன்சின் ஜன்னல் கண்ணாடிகள் கற்களால் உடைக்கப்பட்டு இருந்ததுடன், முன்பக்கத்திலுள்ள 2 டயர்கலும் இரும்பு ஆணிகளால் குத்தி சேதப்படுத்தப்பட்டு இருந்தன. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் மர்மநபர்கள் ஆம்புலன்சை சேதப்படுத்தி விட்டு சென்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டிணம போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

1 More update

Next Story