லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி


லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி
x

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில், ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவரை வீட்டிற்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இதையடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் உதவியுடன் கிருஷ்ணகிரி நோக்கி அழைத்து சென்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோதியது.

நோயாளி பலி

இந்த விபத்தில் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய அதிர்ச்சியில் சந்திரசேகர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.


Next Story