ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
ஆம்பூர்
ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 37), காங்கிரஸ் பிரமுகர். இவர் நேற்று காரில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட கட்சியினர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
---
Related Tags :
Next Story






