ஆனி மாத முதல் வெள்ளியையொட்டி நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆனி மாத முதல் வெள்ளியையொட்டி  நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஆனி மாத முதல் வெள்ளியையொட்டி நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பழச்சாறு, பன்னீர் உள்பட 17 பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுமார் 500 கிலோ எடை கொண்ட மாலைகள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து மாரியம்மன், பண்ணாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்காரத்தை பூசாரி மோகன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Next Story