அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்..!


அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்..!
x

அமமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..!

சென்னை,

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினையில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

முன்னதாக நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.







Next Story