அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்


அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
x

அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. திமிரி ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம், ஆற்காடு தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஆற்காடு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, கணியம்பாடி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆற்காடு நகர செயலாளர் அய்யப்பன், பேரூர் செயலாளர்கள் திமிரி கேசவன், விளாப்பக்கம் சரவணன், கலவை பரத்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளரும், செய்தி தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாவின் வரலாறு தெரியாமல் பேசுவது நாகரிகம் அல்ல. எடப்பாடி பழனிசாமி பணத்தை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். தொண்டர்கள் இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது. சசிகலா அம்மா கூறியது போல நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருந்தால் தமிழகத்தில் அம்மா ஆட்சி நடந்து இருக்கும் என்றறார்.

மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசுகையில் டி.டி.வி. தினகரன் யோசனையை கேட்டிருந்தால் இன்று தமிழகத்தில் அம்மா ஆட்சி மலர்ந்திருக்கும் என்றார்.

மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன் மற்றும் கிளை செயலாளர்கள், முன்னோடிகள் கலந்து கொண்டனர். முடிவில் கலவை பேரூர் துணை செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்


Next Story