சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்

x

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன். இவர் கடந்த மாதம் 12-ந் தேதி பணியில் இருந்தபோது சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். இவரது குடும்பத்துக்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் வரப்பெற்று உள்ளது. இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

Next Story