ராமநாதபுரத்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து... ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு !


ராமநாதபுரத்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து... ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு !
x
தினத்தந்தி 10 Feb 2023 11:53 AM IST (Updated: 10 Feb 2023 12:14 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததுடன், 7 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story