முட்டை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து


முட்டை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே முட்டை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் நேற்று உளுந்தூர்பேட்டையில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்வதற்காக முட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் ஏரிக்கரை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிா்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், முட்டைகள் அனைத்தும் சாலையில் உடைந்து சிதறி ஆறாக ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.


Next Story