மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..!


மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..!
x

ஆரணி அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரணி:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒத்தைவாடி தெருவை சேர்ந்த சேகர் (வயது 63). இவர் தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் உறவினர்களுக்கு பத்திரிக்கை வைக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆரணி அருகே ஸ்கூட்டரில் செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சேகர் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கை பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story