திடீரென தீப்பிடித்து எரிந்த எலெக்டரிக் ஸ்கூட்டர்


திடீரென தீப்பிடித்து எரிந்த எலெக்டரிக் ஸ்கூட்டர்
x

விக்கிரமசிங்கபுரத்தில் எலெக்டரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மருதையாபுரம் தெருவை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 47). விக்கிரமசிங்கபுரத்தில் செல்போன் கடை நடத்தி வரும் இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். இந்தநிலையில் நேற்று ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு தனது நண்பர்களிடம் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் ராமராஜன் மற்றும் அவருடைய நண்பர்கள் உடனடியாக அருகில் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர், தண்ணீரை ஊற்றியதும் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி திடீரென வெடித்தது. இதில் வீட்டின் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் சேதமானது. தீயை அணைப்பதற்குள் எலக்டரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் கடந்த மே மாதம் வாங்கி 2 மாதங்களே ஆன புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது.


Next Story