திருவானைக்காவல் கோவில் கதவை தும்பிக்கையால் திறந்த யானை


திருவானைக்காவல் கோவில் கதவை தும்பிக்கையால் திறந்த யானை
x

திருவானைக்காவல் கோவில் கதவை தும்பிக்கையால் யானை திறந்து வெளியே வந்தது.

திருச்சி

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் யானை அகிலா. இந்த யானைக்கு கோவிலில் தனி நீச்சல் குளம், நடைப்பயிற்சி செய்வதற்கு நடைபாதை உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உச்சிகால பூஜையின்போது கோவிலின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டு, பூஜை முடிந்தபின்னர் திறக்கப்படும். அதன்படி நேற்று முன்தினம் உச்சிகால பூஜையின்போது கோவிலின் கதவு அடைக்கப்பட்டது. பூஜை முடிந்த பின்னர், அந்த கதவை யானை அகிலா தும்பிக்கையால் திறந்து வெளியே வந்தது. இதனை வீடியோவாக எடுத்த கோவில் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1 More update

Related Tags :
Next Story