நகை பட்டறையில் ஒரு கிலோ தங்கத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய ஊழியர் - கோவையில் பரபரப்பு


நகை பட்டறையில் ஒரு கிலோ தங்கத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய ஊழியர் - கோவையில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:58 PM IST (Updated: 20 Oct 2022 1:01 PM IST)
t-max-icont-min-icon

நகை பட்டறையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலைபார்த்து வந்துள்ளார்.

கோவை,

கோவை சண்முக நகர் பகுதியில் தங்க நகைகள் செய்யக்கூடிய பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. இதே பகுதியில் மோகன் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகின்றார். இவரது பட்டறையில் 4 பேர் பணி செய்துவந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நகை பட்டறையில் வேலை முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு அனைவரும் சென்று உள்ளனர். அப்போது, பட்டறையில் வேலைபார்த்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரமோத் என்பவர் பட்டறையின் ஜன்னலை சிறிது திறந்து வைத்து சென்றுள்ளார்.

பின்னர், யாரும் இல்லாத நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த பிரமோத், சுமார் 1,067 கிராம் எடை கொண்டு தங்க கட்டிகள், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து பட்டறை உரிமையாளர் மோகன் குமார் வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இக்கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெரைட்டிஹால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story