சூளைமேட்டில் சோகம்.. வீடு இடிப்பதை வேடிக்கை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு..!


சூளைமேட்டில் சோகம்.. வீடு இடிப்பதை வேடிக்கை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு..!
x

சூளைமேடு அருகே வீடு இடிப்பதை வேடிக்கை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சூளைமேடு:

சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் நேற்று பழைய வீடு ஒன்றை பொக்லைன் எந்திரத்தால் இடித்து கொண்டிருந்தனர். அப்போது அதை வேடிக்கைப் பார்பதற்காக இடிக்கும் வீட்டின் அருகில் இருந்த வீட்டுக்கு, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிபாபு (வயது 43) என்பவர் வந்ததார். அவர், வீட்டுக்குள் தூசு, சத்தம் அதிகமாக வருவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி சுவர் திடீரென அதிர்வில் உடைந்து ஹரிபாபு மேல் விழுந்தது. இதில் விழுந்த சுவர்களின் இடிபாடுக்குள் சிக்கி தவித்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் ஹரிபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் டிரைவர் திருவேற்காட்டை சேர்ந்த மகிழன் (வயது 22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு இடிப்பதை வேடிக்கை பார்க்க வந்து, உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story