முதல்-அமைச்சர் முன்னிலையில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
முதல்-அமைச்சர் முன்னிலையில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்தாகவுள்ளது.
இந்த தொழிற்சாலை 52.4 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. மிட்சுபிஷி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு ரூ.1,800 கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் ஏர் கண்டீஷனர் மற்றும் கம்ப்ரசர் ஆலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த திட்டம் அக்டோபர் 2025-ம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் இந்த தொழிற்சாலைகளுக்கான சோதனை மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.