சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிந்து விழுந்த கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கட்டட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
100 ஆண்டு பழமையான கட்டடத்தை இடிக்க 3 மாதத்திற்கு முன்பே அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் இல்லை. பழைய கட்டடம் இடிந்து விழுந்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story