சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு


தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 75). அங்குள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குப்பைகள் கிடந்துள்ளது அதனை அள்ளுவதற்காக இவர் நேற்று முன்தினம் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவர், வெளியேற முடியாமல் தவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மாலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story