படப்பை அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு


படப்பை அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு
x

படப்பை அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

கிணற்றில் மூழ்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரகாம் ராஜா (வயது 61). அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் குளித்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஆபிரகாம் ராஜா கிணற்றில் மூழ்கினார்.

உடல் மீட்பு

இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை தேடி உள்ளனர். இது குறித்து மணிமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த ஆபிரகாம் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story