ஓட்டலில் பணம் திருடிய முதியவர் சிக்கினார்


ஓட்டலில் பணம் திருடிய முதியவர் சிக்கினார்
x

ஓட்டலில் பணம் திருடிய முதியவர் சிக்கினார்.

சேலம்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஓட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் பார்த்த போது ஓட்டல் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.2 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஓட்டல் பகுதியில் சுற்றித்திரிந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இருசன் (வயது 67) என்பதும், அவர் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முதியவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்.


Next Story