ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி
சேத்துப்பட்டு அருகே ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
ஏரியில் குளிக்க சென்றார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தாலுகா ஈருடையான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே செய்யானந்தல் மதுரா கார்ணம்பாடி ஏரியில் நேற்று மாலை 3 மணி அளவில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பிணமாக மீட்பு
இதையடுத்து சேத்துப்பட்டு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 8 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று காலை தீயணைப்பு துறையினர் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேர தேடலுக்கு பின்னர் சேற்றில் சிக்கி இருந்த அவரை பிணமாக மீட்டனர்.
பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.