ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி

காவேரிப்பாக்கம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகரும்பூர் கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 2000-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொட்டியின் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பி வெளியே தெரிய ஆரம்பித்தது.
இதன் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
அவ்வழியே செல்லும் பொதுமக்களின் மீது இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






