உசிலம்பட்டி அருகே பழமையான நடுகல் கண்டெடுப்பு


உசிலம்பட்டி அருகே பழமையான நடுகல் கண்டெடுப்பு
x

உசிலம்பட்டி அருகே பழங்கால நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே பழங்கால நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே உள்ளது முதலைக்குளம். இந்த கிராமத்தில் நடுகல் சிற்பம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் மற்றும் சோலை பாலு ஆகியோர் கண்டெடுத்தனர். இது சுமார் 3 அடி அகலமும், 5 அடி உயரத்துடன் காணப்படுகிறது. இதில் வீரன் ஒருவன் குதிரையின் மீது சவாரி செய்வது போல் காட்டப்பட்டுள்ளது. அவனது வலது கையில் நீண்டவாள் பிடித்த நிலையில், இடது கை கயிற்றை பிடித்தவாறு காணப்படுகிறது.

இந்த உருவம் சற்று வித்தியாசமாக தாடியுடன் காணப்படுகிறது. இந்த உருவத்திற்கு கீழே இரண்டு மனித உருவங்கள் உள்ளது. அதில் ஒரு பெண்மணி கையில் பண முடிப்பு வைத்திருப்பது போலவும், மற்றொரு ஆண் உருவம் பாதுகாவலன் போன்றும் காணப்படுகிறது. இங்கு காட்டப்பட்டுள்ள மனித உருவங்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பில் காட்டப்பட்டுள்ளது.

இங்கு குதிரையில் மேல் உள்ள வீரனுக்கும், குதிரைக்கும் அதிக அளவில் அணிகலன்கள் காணப்படுகிறது. ஆகையால் இந்த சிற்பத்தில் உள்ள மனிதர் ஒரு இனக்குழு தலைவராக இருக்கக்கூடும். இச்சிற்பத்தை உள்ளூர் மக்கள் பாட்டன், பாட்டி கல் என்று கருதுகின்றனர். இச் சிற்பத்தின் தோற்றத்தின் அடிப்படையில் இது சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக அறிய முடிகிறது. இதே ஊரில் இரண்டு தமிழி, தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும், பெருங்கற்கால தாழிப்பானைகளின் எச்சங்களும் காணப்படுகின்றன.

இது மதுரையிலிருந்து சேரநாட்டுக்கு செல்லும் வழித்தடத்தில் நாகமலைக்கு தென்புறம் அமைந்துள்ளது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்துள்ளதை காணமுடிகிறது.


Next Story