அகழாய்வில் கிடைத்த பண்டைய கால கருவிகள்


அகழாய்வில் கிடைத்த பண்டைய கால கருவிகள்
x

சிவகாசி அருகே அகழாய்வில் பண்டைய கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே அகழாய்வில் பண்டைய கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அகழாய்வு பணி

சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை தோண்டப்பட்ட 11 குழிகளில் எண்ணற்ற பழங்கால கருவிகள், அரிய வகையான பொருட்கள், மண்பானைகள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் தற்போது 12-வது குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் எண்ணற்ற பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இடம் தேர்வு

இந்த குழியில் மிருகங்களை வேட்டையாட பயன்படுத்திய பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கோடாரி, களரி, கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், சிவப்பு நிறத்தில் கூலாங்கற்கள், கண்ணாடி பாசிமணிகள், சிறுவர்கள் பயன்படுத்திய விசில், சுடுமண்ணால் ஆன பெண் தெய்வ உருவ வழிபாடு உள்ள சிற்பம், பண்டைய காலத்தில் பயன்படுத்திய கல்வெட்டு சிற்பம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் 13 மற்றும் 14-வது அகழாய்வு குழி தோண்டுவதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story