ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக வீடியோ பரவல் - ஆய்வு செய்த அதிகாரிகள்


x

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் இருந்து 5 வயது பெண் யானை ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி யானைகள் முகாமில் யானை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகன்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

புதிய பாகன்கள் நியமிக்கப்பட்ட நிலையில் யானை தாக்கப்படுவதாக மீண்டும் வீடியோ பரவியது. இந்த நிலையில் அசாமிலிருந்து வந்த அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.


Next Story