கம்பராய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்


கம்பராய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
x

கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.

தேனி

மார்கழி மாத இறுதி நாளான நேற்று, கம்பத்தில் உள்ள கம்பராய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சாயரக்சை, ஸ்ரீமத் மூல பாராயணம், சகஸ்ரநாம பாராயணம், மாப்பிள்ளை அழைப்பு, சீர் எடுத்து வருதல், ஆண்டாள்-பெருமாள் மாலைமாற்று வைபவம், தீபாராதனை, ஊஞ்சல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து வாரணம் ஆயிரம் பாடி ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்ச்சியை கோவை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் ஸ்ரீராம், கண்ணன் ஆகியோர் பக்தர்களிடம் மாலைகளை பெற்று ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் சாற்றினர். இதேபோல் சீர் வரிசையாக புதிய புடவை, வேட்டி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வந்து சாமிக்கு சாற்றி மீண்டும் எடுத்து கொண்டு சென்றனர். நிகழ்ச்சியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story