வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்


வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
x

வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நரடைபெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி


வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நரடைபெற்றது.

வந்தவாசி காந்தி ரோட்டில் அமைந்துள்ள ரங்கநாதர் பெருமாள் கோவிலில் மார்கழி மாத நிறைவையொட்டி ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து ஆண்டாளுக்கும் ரங்கநாதர் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து மங்கள மேளவாதியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை கோலாட்டம் ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.Next Story