பயணிகளின் நகைகளை திருடிய ஆந்திர பெண் கைது


பயணிகளின் நகைகளை திருடிய ஆந்திர பெண் கைது
x

ஓடும் ரெயில்களில் பயணிகளின் நகைகளை திருடிய ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

காட்பாடி

மைசூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தது.

அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கி சந்தேகப்படும் வகையில் சென்ற பெண்ணை காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் என்றும் அவர் பயணிகளிடம் 8¼ பவுன் நகைகளை திருடி பையில் வைத்திருப்பது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 8¼ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story