திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபர் கைது


திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2023 4:04 PM IST (Updated: 7 Aug 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் காட்ரோடு பகுதியில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், கோவிலுக்கு செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனையடுத்து திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் தப்பியோட முயன்றார், இதனை கண்ட போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் எள்ளூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆகாஷை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மலைக் கோவிலுக்கு செல்லும் வழியில் வாலிபர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story