கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை...!


கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை...!
x

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா (28) என்ற இளைஞர் இன்று தற்கொலை செய்து கொண்டார். உடனே தற்கொலை சம்பவம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றியும் வழக்கு பதிவு செய்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story